sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 எம்.எல்.ஏ.,க்கள் மீதான ஊழல் வழக்கு: பட்டியல் வழங்குவதில் போலீசார் பாரபட்சம்

/

 எம்.எல்.ஏ.,க்கள் மீதான ஊழல் வழக்கு: பட்டியல் வழங்குவதில் போலீசார் பாரபட்சம்

 எம்.எல்.ஏ.,க்கள் மீதான ஊழல் வழக்கு: பட்டியல் வழங்குவதில் போலீசார் பாரபட்சம்

 எம்.எல்.ஏ.,க்கள் மீதான ஊழல் வழக்கு: பட்டியல் வழங்குவதில் போலீசார் பாரபட்சம்

1


ADDED : ஜன 11, 2026 01:32 AM

Google News

ADDED : ஜன 11, 2026 01:32 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழக எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான ஊழல் வழக்குகள் குறித்த விபரங்களை வழங்குவதில், தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் பாரபட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

த.வெ.க., சென்னை மண்டல வழக்கறிஞர் பிரிவு இணை செயலர் ஆதித்யசோழன், முன்னாள் மற்றும் இந்நாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான ஊழல் வழக்குகள் விபரம் கேட்டு, லஞ்ச ஒழிப்பு துறைக்கு 2024 நவம்பரில் மனு அனுப்பினார்.

அதற்கு பதில் இல்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மனுதாரர் கோரிய தகவல்களை வழங்க வேண்டும் என, மாநில தகவல் ஆணையத்திற்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.மாலா உத்தரவிட்டார்.

வருமானம் அதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த மாதம் தகவல் வழங்கினர். அ.தி.மு.க., முன்னாள் மற்றும் இந்நாள் எம்.எல்.ஏ.,க்கள் மீது, 10 ஊழல் புகார்கள் விசாரணையில் உள்ளன என, விபரம் அளித்துள்ளனர்.

இதன்படி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, வைத்திலிங்கம், நாமக்கல் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர், கோவை வடக்கு எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன், தஞ்சை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., ரெங்கசாமி.

உசிலம்பட்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., நீதிபதி, முன்னாள் அமைச்சர் சேவூர் ராமசந்திரன், பண்ருட்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா ஆகியோர் மீது, வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு குற்றசாட்டு உள்ளிட்ட வழக்குகள் விசாரணையில் உள்ளன.

இந்த தகவல்களை மட்டும் வழங்கிய லஞ்ச ஒழிப்பு போலீசார், தி.மு.க., -- எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு புகார் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

கண்காணிப்பு தகவல் வழங்குவதிலும், லஞ்ச ஒழிப்பு போலீசார் பாரபட்சமாக செயல்படவில்லை.

கடந்த தேர்தலில், 'தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் அரசு தலையீட்டால் சரியாக செயல்படாத, தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் சீரமைக்கப்படும்.

'ஊழல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்' என, தி.மு.க., வாக்குறுதி அளித்தது. இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.






      Dinamalar
      Follow us