பெரம்பலூரில் போலீஸ் என்கவுன்டர்: ரவுடி சுட்டுக்கொலை
பெரம்பலூரில் போலீஸ் என்கவுன்டர்: ரவுடி சுட்டுக்கொலை
UPDATED : ஜன 27, 2026 08:10 AM
ADDED : ஜன 27, 2026 07:12 AM

பெரம்பலூர்: பெரம்பலூரில் ரவுடி அழகு ராஜா (கொட்டு ராஜா) போலீசார் என்கவுன்டரில் உயிரிழந்தார். எஸ்.ஐ., சங்கர் என்பவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த ஜனவரி 24ம் தேதி பெரம்பலூர் அருகே மதுரையைச் சேர்ந்த பிரபல ரடிவு வெள்ளைக்காளி மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி கொலை முயற்சி நடந்தது. இந்த வழக்கில் ரவுடி அழகுராஜாவை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இவர் மீது அண்ணா நகர் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு கொலை வழக்கு, உசிலம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஒரு கொலை வழக்கு, கீரைத்துறை போலீஸ் ஸ்டேஷனில் ஒரு கொலை வழக்கு உட்பட 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே உள்ள வனப்பகுதியில் அவரது தலைமையிலான கும்பல் பதுக்கிய ஆயுதத்தை தேட போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது எஸ்.ஐ., சங்கர் என்பவரை அரிவாளால் வெட்டிவிட்டு அழகு ராஜா தப்ப முயன்றார். தற்காப்புக்காக போலீசார் நடத்திய என்கவுன்டரில் ரவுடி அழகு ராஜா (கொட்டு ராஜா) உயிரிழந்தார்.
6 பேர் கைது
அழகுராஜாவின் கூட்டாளிகள் மதுரையை சேர்ந்த நிர்மல் குமார், 26, பாண்டி முனீஸ்வரன்,29, கார்த்தி,29, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன்,34, திருச்சியை சேர்ந்த அரவிந்த், 29, கோத்தகிரியை சேர்ந்த வினோத், 34, ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டுக் காரணமாக காயம் ஏற்பட்டு உள்ளது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

