பொன்முடிக்கு உள்நோக்கம் இல்லை: விளக்கம் சொல்கிறது போலீஸ்
பொன்முடிக்கு உள்நோக்கம் இல்லை: விளக்கம் சொல்கிறது போலீஸ்
ADDED : ஜூலை 26, 2025 03:24 AM

சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆபாச பேச்சு வழக்கை, சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசார் முடித்து வைத்துள்ளனர்.
சென்னையில், கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடந்த கூட்டத்தில் பேசிய பொன்முடி, சைவ, வைணவ சமயங்களின் புனிதச் சின்னங்களை, விலைமாதர்களோடு ஒப்பிட்டு பேசியிருந்தார்.
பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். பொன்முடி மீது தமிழகம் முழுதும், பல்வேறு கா வல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப் பட்டன.
சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், புகார் தெரிவித்த பாரத் ஹிந்து முன்னணியின் சென்னை மாவட்ட அமைப்பாளர் சதீஷுக்கு, சென்னை வேப்பேரி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் அனுப்பியுள்ள பதில்:
பொன்முடியின் பேச் சை கவனமுடன் பரிசீலித்ததில், மதம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவர் பே சவில்லை. 50 ஆண்டுகளுக்கு முன் நடந்த பட்டி மன்றத்தில், விவாதம் செய்யப்பட்ட ஒரு கருத்தையே, மீண்டும் நினைவு படுத்தி பேசியுள்ளார்.
பொன்முடியின் பேச்சை முழுமையாக கேட்காமல், சமூக வலைத ளங்களில் வெட்டி, ஒட்டி பரப்பப்பட்ட பேச்சை மட்டும் பார்த்துவிட்டு, ஒரு குறிப்பிட்ட மதத்தி னரின் மனம் புண்படுவதாக குறிப்பிட்டுள்ளது தெரிய வருகிறது.
எனவே, பொன்முடி மீது குற்ற நடவடிக்கை எடுக்க தகுந்த முகாந்திரம் ஏதும் இல்லை. இம்மனு மீதான விசாரணை முடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.