/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜே.சி.பி., இயந்திரத்தில் தீ போலீஸ் விசாரணை
/
ஜே.சி.பி., இயந்திரத்தில் தீ போலீஸ் விசாரணை
ADDED : பிப் 14, 2026 04:15 AM

பண்ருட்டி: ஜே.சி.பி.இயந்திரம் தீப்பற்றி எரிந்தது குறித்து புதுப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த பெரிய எலந்தம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வடமலை. இவரது மகன் பழனிசாமி,35; இவர் ஜே.சி.பி., இயந்திரம் உரிமையாளர்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இரவு 7:00 மணிக்கு திருவாமூர் பெட்ரோல் பங்க் அருகே சாலையின் ஓரம் ஜே.சி.பி., இயந்திரத்தை நிறுத்தி வைத்திருந்தனர்.
நள்ளிரவு 12:30 மணிக்கு, இயந்திரத்தின் என்ஜின் பகுதி திடீரென தீப்பற்றி எரிந்தது. விரைந்து வந்த பண்ருட்டி தீயணைப்பு படையினர் தீ மேலும் பரவாமல் தீயை அணைத்தனர்.
இது குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

