ADDED : டிச 04, 2024 11:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலுார் : வங்கதேசத்தில் ஹிந்துக்கள் கொல்லப்படுவதை கண்டித்து, வங்கதேச ஹிந்து உரிமை மீட்பு குழு சார்பில், வேலுாரில் தடையை மீறி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் பங்கேற்ற, 100க்கும் மேற்பட்டோரை, போலீசார், திருமண மண்டபத்தில் அடைத்தனர். இவர்களில், 50க்கும் மேற்பட்டோர் அய்யப்ப பக்தர்கள்.
மதியம், அவர்களுக்கு சைவ குஸ்கா எனக்கூறி போலீசார் உணவு வழங்கினர். சாப்பிட்டபோது, சிக்கன் இறைச்சி துண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
ஆத்திரமடைந்த அவர்கள் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின், அவர்களுக்கு வேறு உணவை போலீசார் வழங்கினர்.