ADDED : நவ 19, 2024 09:23 AM

சென்னை: ரவுடி சீசிங் ராஜா தொடர்புடைய 14 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.
கடந்த செப்., 23ம் தேதி, ஆற்காடு சுரேஷின் நெருங்கிய நண்பரான சீசிங் ராஜா சென்னை நீலாங்கரை அருகே போலீசாரை தாக்கி விட்டு, தப்பிக்க முயன்றார். அவரை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். சீசிங் ராஜா மீது 6 கொலை வழக்கு உட்பட 39 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், இன்று (நவ.,19) சென்னையில், சீசிங் ராஜா தொடர்புடைய 14 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.
சென்னை தாம்பரத்தில் உள்ள சீசிங் ராஜா வீடு மற்றும் சேலையூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட இடங்களில், சீசிங் ராஜா உறவினர்களுக்கு தொடர்புடைய வீடுகளில் சோதனை நடந்தது. சோதனையில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சீசிங் ராஜா மீது நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.