ADDED : பிப் 03, 2026 05:20 AM

சென்னை: காவலர் குடும்பத்தினர், முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ளகடிதத்தில் கூறப்பட்டுஉள்ளதாவது:
காவலர்களுக்கு எட்டு மணி நேர பணி என்பது எட்டாக்கனி யாகி விட்டது. தொடர்ச்சியாக, 24 மணி நேரம் பணிபுரியும் காவலர் க ளுக்கு, அதற்கு ஏற்றார் போல், ஒரு நாள் ஓய்வு வழங்க வேண்டும்.
ஆயுதப்படை காவலர்களை, கைதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் காவலுக்கு அனுப்புதல், சட்டம் - ஒழுங்கு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு உதவி செய்தல், கலவரம் ஏற்பட்டால், அதை ஒடுக்கும் பணி ஆகியவற்றில் ஈடுபடுத்த வேண்டும்.
காவலர்களுக்கு வார விடுமுறை தருவதில், பெரும் குளறு படி ஏற்படுகிறது. இதற்கென செயலி ஒன்றை உருவாக்கி, காவலர்களுக்கு வார விடுமுறை விடப்படும் முறையை, கண்காணிக்க வேண்டும்.
போலீசார் பாதுகாப்பு கருதி, கைதிகளை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயி லாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அனு மதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

