சவுராஷ்டிர சமூக அமைப்புகள் நடத்தும் அரசியல் மாநாடு
சவுராஷ்டிர சமூக அமைப்புகள் நடத்தும் அரசியல் மாநாடு
ADDED : டிச 25, 2025 08:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் வரும், 28ம் தேதி, 'சவுராஷ்டிர அரசியல் எழுச்சி மாநாடு' நடக்க உள்ளது.
இந்த மாநாடு, நாம் தமிழர் கட்சி சார்பில் நடக்க உள்ளது என, நம் நாளிதழில், நேற்று செய்தி வெளியானது. ஆனால், அந்த மாநாட்டை சவுராஷ்டிர சமூக அமைப்புகள் நடத்துகின்றன.
சவுராஷ்டிர அரசியல் எழுச்சி மாநாட்டு குழு தலைவர் தினேஷ் கூறியதாவது: தமிழ்நாடு சவுராஷ்டிர அரசியல் எழுச்சி மாநாட்டை, சவுராஷ்டிர அரசியல் செயல்பாட்டுக் குழு மற்றும் அனைத்து சவுராஷ்டிர சமூக அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன. மாநாட்டு தலைவராக, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி கிஷோர் குமார் இருப்பார். இந்த மாநாட்டில், சீமான் உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மாநாட்டில், சமூக அரசியல் மேம்பாட்டிற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

