sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'தினமலர்' ஆர்.லட்சுமிபதிக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து

/

'தினமலர்' ஆர்.லட்சுமிபதிக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து

'தினமலர்' ஆர்.லட்சுமிபதிக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து

'தினமலர்' ஆர்.லட்சுமிபதிக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து


ADDED : ஏப் 30, 2025 07:39 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 07:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பத்மஸ்ரீ விருது பெற்ற, 'தினமலர்' இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதிக்கு, அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., - த.மா.கா., தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

அதன் விபரம்:

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: 'தினமலர்' நாளிதழின் இணை நிர்வாக ஆசிரியர் லட்சுமிபதி, மத்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான, 'பத்மஸ்ரீ' விருது பெற்றுள்ளதற்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன்: குடியரசு தினத்தை ஒட்டி, மத்திய அரசு அறிவித்த, 2025ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் பட்டியலில், 'தினமலர்' இணை நிர்வாக ஆசிரியர் லட்சுமிபதி பெயர் இடம் பெற்றிருந்தது பாராட்டுக்குரியது.

நேற்று முன்தினம் ஜனாதிபதி, புதுடில்லியில், பத்ம விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தது மகிழ்ச்சிக்குரியது.

இதன் வாயிலாக, தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும், குறிப்பாக தமிழக இதழியல் துறையில் பணிபுரிவோருக்கும் பெருமை சேர்க்கிறது. பத்திரிகை துறையில் கடின உழைப்பை மேற்கொண்டு, உயர் பொறுப்பில் மிகச்சிறப்பாக பணியாற்றி, பத்திரிகை தர்மத்தை காப்பவர்.

பத்திரிகைகளிலும், கல்வியிலும் ஆற்றி வரும் பணிகள், அவரை உயர்ந்த இடத்தில் வைத்திருப்பதற்கு அங்கீககாரமாக, நாட்டின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருது கிடைத்திருக்கிறது.

'தினமலர்' நாளிதழின் வெற்றிப் பயணத்திற்கு, லட்சுமிபதியின் அர்ப்பணிப்பான பணி, மிக முக்கிய காரணம். பத்மஸ்ரீ விருது பெற்று, பத்திரிகை துறைக்கும், தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும், புகழ் சேர்த்திருக்கும் லட்சுமிபதியை, த.மா.கா., சார்பில் பாராட்டுகிறேன்.

தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்: சிலர் மலையளவு செய்து, கடுகளவு பலன் பெறுவர். சிலர் கடுகளவு செய்து, மலை அளவு பலன் பெறுவர். 'தினமலர்' குழுமம் தேசத்திற்கு செய்து கொண்டிருப்பது பெருமளவு. அது கடல் அளவா, மலை அளவா, அதற்கும் மேல் அளவா என்பதை உலகறியும்.

என் பார்வைக்கு அதற்கும் மேல் அளவு. அதற்காக, ஓரளவு தந்தது தான் லட்சுமிபதிக்கு கொடுத்த பத்ம விருது. புகழ் பெற்றவர்கள், புகழ் பரப்பியவர்களுக்கு கொடுப்பது பத்ம விருதுகள்.

பெற்றவர்களுக்கு அது மேலும் புகழ் சேர்க்கும். லட்சுமிபதிக்கு விருது கொடுத்ததால், விருது புகழ் பெற்றது என்றால் மிகையாகாது.

பா.ம.க., தலைவர் அன்புமணி: இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் ஆற்றிய பணிகளுக்காக, பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும், 'தினமலர்' இணை நிர்வாக ஆசிரியர் ஆர்.லட்சுமிபதிக்கு, என் உளமார்ந்த வாழ்த்துக்கள். கல்வி, இலக்கியம் மற்றும் இதழியல் துறையில், அவரது சாதனைப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.






      Dinamalar
      Follow us