/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
30 ஆண்டுக்கு முந்தைய அரசியல்: மேயர் மிரட்டலால் எதிர்க்கட்சிகள் 'கிலி'
/
30 ஆண்டுக்கு முந்தைய அரசியல்: மேயர் மிரட்டலால் எதிர்க்கட்சிகள் 'கிலி'
30 ஆண்டுக்கு முந்தைய அரசியல்: மேயர் மிரட்டலால் எதிர்க்கட்சிகள் 'கிலி'
30 ஆண்டுக்கு முந்தைய அரசியல்: மேயர் மிரட்டலால் எதிர்க்கட்சிகள் 'கிலி'
ADDED : பிப் 26, 2026 06:29 AM

துாத்துக்குடி: 'கடந்த 30 ஆண்டுகளுக்கு முந்தைய அதிரடி அரசியல், மீண்டும் ஆரம்பிக்கப்படும்' என தி.மு.க., மேயர் மிரட்டல் விடுத்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
துாத்துக்குடியில், இரு தினங்களுக்கு முன், தி.மு.க., வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான கீதா ஜீவன் தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில், கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினரும், துாத்துக்குடி மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி பேசியதாவது:
துாத்துக்குடி தொகுதியில், பா.ஜ., நடத்தும் தெருமுனை பிரசார கூட்டங்களில் பேசும் அனைவரும் முதல்வர், துணை முதல்வர், கனிமொழி எம்.பி., மற்றும் தி.மு.க., ஆட்சி குறித்து அவதுாறு பரப்புகின்றனர். தேர்தல் நேரத்தில் இப்படி பேசுவோருக்கு பதிலடி கொடுத்தால்தான், நம் இலக்கை அடைய முடியும்.
குடிநீர் திட்டத்தில் முறைகேடு செய்த முன்னாள் மேயர் சசிகலா புஷ்பா, மாநகராட்சி நிர்வாகம் குறித்து தேவையில்லாத கருத்துகளை கூறுகிறார். தி.மு.க., ஆட்சி குறித்து தவறான கருத்துகளை பேசுபவர்கள், இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், 30 ஆண்டுகளுக்கு முந்தைய அதிரடி அரசியல் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.
யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் கிடையாது. அமைதியாக செல்வதால், நாங்கள் அச்சப்படுவதாக நினைக்க வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து, “பா.ஜ., எழுப்பிய கேள்விகளுக்கு நேரடியாக பதில் கூற முடியாததால், மேயர் ஜெகன், பொதுமேடையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி, அரசியல் மிரட்டல் விடுத்துள்ளார்,” என பா.ஜ., மாவட்டச் செயலர் சித்ராங்கதன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

