டில்லியில் இன்று பொங்கல் கொண்டாட்டம்; பிரதமர் மோடி பங்கேற்கிறார்
டில்லியில் இன்று பொங்கல் கொண்டாட்டம்; பிரதமர் மோடி பங்கேற்கிறார்
UPDATED : ஜன 14, 2026 12:19 AM
ADDED : ஜன 13, 2026 11:43 AM

புதுடில்லி: டில்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் இன்று (ஜனவரி 14) நடைபெற உள்ள பொங்கல் விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
ஆண்டுதோறும் டில்லியில் உள்ள தனது இல்லத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பொங்கல் கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டும் இன்று (ஜனவரி 14) தனது இல்லத்தில் எல்.முருகன் பொங்கல் கொண்டாட உள்ளார்.
இல்லத்தில் கரும்பு, மஞ்சள், வாழை மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார். துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
சிலம்பாட்டம், கரகாட்டம் மற்றும் தப்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டு நடந்த பொங்கல் விழாவில் பிரதமர் மோடி, திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றியதுடன், சிறுதானியங்களின் முக்கியத்துவத்தைப் பற்றியும் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

