sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மிரள விடும் காளைகள்... மல்லுக்கட்டும் வீரர்கள்; அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

/

மிரள விடும் காளைகள்... மல்லுக்கட்டும் வீரர்கள்; அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

மிரள விடும் காளைகள்... மல்லுக்கட்டும் வீரர்கள்; அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

மிரள விடும் காளைகள்... மல்லுக்கட்டும் வீரர்கள்; அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

2


UPDATED : ஜன 17, 2026 11:55 AM

ADDED : ஜன 17, 2026 07:16 AM

Google News

UPDATED : ஜன 17, 2026 11:55 AM ADDED : ஜன 17, 2026 07:16 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலமாக இன்று துவங்கியது.

பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரையில் அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டன. இந்த நிலையில், இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

Image 1523014

இதனை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து, ஒவ்வொரு காளைகயாக அவிழ்த்து விடப்பட்டு வருகிறது. சீறிப்பாயும் காளைகளின் திமிலை பிடித்து அடக்கி வருகின்றனர். பெரும்பாலான காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் பாய்ந்து ஓடின.

Image 1523012

முறையான மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு, ஜல்லிக்கட்டில் 1,100 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் களம்காண உள்ளனர்.

Image 1523015

முதல்வர் வருகை

ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் ஸ்டாலின் நேரடியாக பார்த்து ரசித்து வருகிறார். அவருடன் அமைச்சர்கள் மூர்த்தி, கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் தென்னரசு மற்றும் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரும் உள்ளன. முக்கிய பிரமுகர்கள், பிரபலங்கள் மற்றும் வெளிநாட்டவர்களும் பங்கேற்று ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்து வருகின்றனர்.



Image 1523016

இதனால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Image 1523017

அதிக காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு சொகுசு காரும், சிறந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டரும் பரிசாக வழங்கப்பட இருக்கிறது. 2ம் பரிசை வெல்லும் மாடுபிடி வீரர் மற்றும் காளைக்கு பைக் பரிசாக வழங்கப்பட இருக்கிறது.

Image 1523018

கூட்டத்திற்குள் புகுந்த காளை

இதில், ஜல்லிக்கட்டு மைதானத்தில் இருந்து வெளியேறிய காளை ஒன்று, அங்கிருந்த கூட்டத்திற்குள் திடீரென புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு போடப்பட்டிருந்த தடுப்புகளை முட்டித் தள்ளிவிட்டு சீறிப்பாய்ந்தது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.








      Dinamalar
      Follow us