UPDATED : ஜன 06, 2024 06:08 PM
ADDED : ஜன 06, 2024 03:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பொங்கல் பரிசுத்தொகுப்பு வரும் 10ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேசன் அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு அடங்கிய தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப்பரிசு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில், வரும் 10ம் தேதி பொங்கல் பரிசுத் தொகுப்பான வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நாளை முதல் 9 ம் தேதி வரை டோக்கன்கள் விநியோகிக்கப்படும். 10 முதல் 13ம் தேதி வரை மக்கள் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.