பொங்கல் பரிசு தொகுப்பு 1.47 கோடி பேருக்கு வினியோகம் பெரியகருப்பன் தகவல்
பொங்கல் பரிசு தொகுப்பு 1.47 கோடி பேருக்கு வினியோகம் பெரியகருப்பன் தகவல்
ADDED : ஜன 13, 2025 12:35 AM

சென்னை: கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிக்கை:
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு, தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மாநிலம் முழுதும் 34,793 ரேஷன் கடைகளில், 2.20 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இதற்காக, 50,000 கூட்டுறவு பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கு முன்பாக, அனைத்து அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் வகையில் பணி நடந்து வருகிறது.
அதன்படி, 11ம் தேதி வரை தமிழகம் முழுதும் 1.47 கோடி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. அதாவது, 67 சதவீதம் பேர் பெற்றுள்ளனர். மீதமுள்ள பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.