ADDED : ஜன 04, 2025 12:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான, 'டோக்கன்' விநியோகம் துவங்கி உள்ளது.
தமிழக அரசு, வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.21 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. இவற்றின் வினியோகம் ரேஷன் கடைகளில் வரும், 9ம் தேதி துவங்குகிறது.
பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்க, அனைத்து கார்டுதாரர்களும் ஒரே சமயத்தில் கூட்டமாக வரக்கூடாது என்பதற்காக, எந்த தேதி, நேரம் வர வேண்டும் என்ற விபரம் அடங்கிய, 'டோக்கன்' அவர்களின் வீடுகளில் வினியோகம் செய்யப்பட உள்ளது.
இப்பணியில், ரேஷன் ஊழியர்கள் நேற்று முதல் ஈடுபட்டுள்ளனர்.