ஜன.3 முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் டோர் டெலிவரி!
ஜன.3 முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் டோர் டெலிவரி!
ADDED : டிச 31, 2024 03:36 PM

சென்னை: பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் வரும் (ஜன) 3ம் தேதி முதல் வீடு, வீடாக விநியோகிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு வழங்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
பொங்கல் திருநாளுக்கான இலவச வேட்டி, சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இந் நிலையில், பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் வரும் 3ம் தேதி முதல் வீடு, வீடாக விநியோகிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு கூறி உள்ளதாவது;
வரும் (ஜனவரி) 9ம் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். ஒரு நாளுக்கு 200 குடும்ப அட்டைதாரர்கள் பரிசுத் தொகுப்பு பெறும் வகையில் டோக்கன் வழங்கப்பட உள்ளது.
ஜனவரி 3ம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் வீடு, வீடாக விநியோகம் செய்யப்படும்.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.