வங்கி கணக்கில் பொங்கல் பரிசு தொகை; பரிசீலிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
வங்கி கணக்கில் பொங்கல் பரிசு தொகை; பரிசீலிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஜன 08, 2024 04:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: வங்கி கணக்கில் பொங்கல் பரிசுத்தொகை செலுத்துவதை அரசு பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரைக் கிளை நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவு: பொங்கல் பரிசுத்தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும். வங்கிக் கணக்கில் வரவு வைப்பதில் அரசுக்கு என்ன சிக்கல் இருக்கிறது?.
கரும்பு கொள்முதலுக்கும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தலாமே?. அடுத்தாண்டு சர்க்கரைக்கு பதில் வெல்லம் வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும். பொங்கல் தொகுப்பில் வெல்லம் வழங்க வேண்டும்.
ரூ.1,000 ரொக்கத்தை வங்கியில் வரவு வைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரைக் கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.