UPDATED : ஏப் 12, 2025 08:06 PM
ADDED : ஏப் 12, 2025 07:21 PM

மதுரை: தமிழகத்தில் ஆளுங்கட்சியை சேர்ந்த ஒருவர் (அமைச்சர் பொன்முடி) பெண்களைப் பற்றி தரக்குறைவாக கண்டனத்திற்குரிய வகையில் விமர்சனம் செய்து உள்ளார் என தமிழக கவர்னர் ரவி கூறியுள்ளார்.
கல்விக்கூடங்களில் கம்பர் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மதுரை தியாகரசர் பொறியியல் கல்லூரியில் நடந்தது. 
இதில் பங்கேற்ற தமிழக கவர்னர் ஆர். என் .ரவி ,'தமிழகத்தில் ஆளுங்கட்சியை சேர்ந்த ஒருவர் (அமைச்சர் பொன்முடி) பெண்களைப் பற்றி தரக்குறைவாக கண்டனத்திற்குரிய வகையில் விமர்சனம் செய்து உள்ளார்.
அவரை நான் வேறு வழியின்றி கனவான் என அழைக்கும் கட்டாயத்தில் உள்ளேன். சிவன் விஷ்ணுவை வழிபடுபவரின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார். கடவுள் வழிபாட்டை கொச்சைப்படுத்தி உள்ளார். தமிழ் பாரம்பரியம், கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் கட்டாயத்தில் உள்ளோம்,' என்று பேசினார்.

