sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பூச்சாண்டி காட்ட வேண்டாம்: குஷ்பு காட்டம்

/

பூச்சாண்டி காட்ட வேண்டாம்: குஷ்பு காட்டம்

பூச்சாண்டி காட்ட வேண்டாம்: குஷ்பு காட்டம்

பூச்சாண்டி காட்ட வேண்டாம்: குஷ்பு காட்டம்


UPDATED : மார் 13, 2024 07:58 PM

ADDED : மார் 13, 2024 06:57 PM

Google News

UPDATED : மார் 13, 2024 07:58 PM ADDED : மார் 13, 2024 06:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: நான் பேசிய ஒரு கருத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மக்கள் மத்தியில் கொண்டு போய் திசை திருப்பும் வகையில் பதிவு போடுவது தி.மு.க.,வினரின் வேலை எனவும், இந்த பூச்சாண்டி எல்லாம் என்னிடம் காட்டாதீங்க என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு கூறியுள்ளார்.

தமிழக பா.ஜ., சார்பில், போதை பொருளை ஒழிக்க வலியுறுத்தி, சென்னை செங்குன்றத்தில் நேற்று முன்தினம்( மார்ச் 11) கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், பா.ஜ., நிர்வாகியுமான நடிகை குஷ்பு பேசுகையில், 'தாய்மார்களுக்கு, 1,000 ரூபாய் கொாடுத்தா, பிச்சை போட்டா, அவர்கள் உங்களுக்கு ஓட்டு போட்டு விடுவார்களா' என்றார். இதற்கு, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அக்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

இது தொடர்பாக குஷ்பு சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது: உண்மை எப்படி பயத்தை கிளப்பி விடும் என்பதை நான் அழகா பார்த்து கொண்டுள்ளேன். தி.மு.க.,வில் அமைச்சர்கள், பேச்சாளர்கள், கடைசி தொண்டர்கள் வரை அனைவரும் இன்னைக்கு என்னை பார்த்து பேசிட்டு இருக்காங்க. வீடியோ வெளியிடுகின்றனர். சமூக வலைதளத்தில் நான் எதையும் அழிக்கவில்லை. நான் பேசும்போது, ஒரு 'ஐடி விங்'கோ, 'வார் ரூம்' வைத்துக் கொண்டு பேசுவது இல்லை. நேருக்கு நேர் பேசுற தைரியம் எனக்கு உண்டு. அதை நான் செய்கிறேன்.

எத்தனை பேர் எனக்கு எதிராக, எனக்கு எச்சரிக்கையாக ஒரு சில விஷயம் சொல்லியிருக்காங்க. நான் ஒரே விஷயம் சொல்ல விரும்புகிறேன். ஏன் அவ்வளவு பயந்து உட்கார்ந்திருக்கீங்க. குஷ்பு பேசுனா அவ்வளவு பயமா?

நான் பேசியதற்கு தவறான அர்த்தம் எடுத்துக்கொண்டு அதை மட்டும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்கும், நீங்க திசை திருப்பும் ஒரு வேலையை செய்றதுக்கும் குஷ்பு இங்கு இல்லை. அது உங்களுடைய வேலை. எந்தெந்த வகையில், நீங்கள் மக்களை ஏமாற்றுகிறீர்கள். ஏமாற்றுவீர்கள் என்பது உங்களுக்கும் தெரியும். மக்களுக்கும் தெரியும். நான் இன்றைக்கு உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன்.

டாஸ்மாக் குறைப்பீங்களா? குறைக்க மாட்டீங்களா? இது நீங்க சொன்னது. முதல்வர் ஸ்டாலின் சொன்னது. உங்களுடைய அமைச்சர் உதயநிதி சொன்னது. 2 ஆயிரம் கோடி மதிப்பு கொண்ட 3500 கிலோ போதைப்பொருள் உங்க கட்சியை சேர்ந்தவரிடம் பறிமுதல் செய்யப் பட்டு உள்ளது. அதில் எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என நீங்க சொல்லலாம். செந்தில்பாலாஜி சிறையில் இருக்காரு. அதுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் சொல்லலாம்.

பழைய சமூக வலைதள பதிவுகள் எல்லாம் எடுத்து பதிவிடுவதும், பழைய பேச்சுகளை எல்லாம் எடுத்து மீண்டும் வெளியிடுவது உங்களுடைய டிஎன்ஏ., இப்ப இருக்கும் விஷயங்களை பேசுவதற்கு உங்களிடம் எதுவும் இல்லை. மக்களுக்கு என்ன செய்திருக்கோம். செய்து கொண்டு வருகிறோம். அதை மட்டும் சொல்லுங்களேன். அதை சொல்வதற்கு உங்களுக்கு தைரியம் இல்லை. இருக்கவும் இருக்காது. திமுக., வை பற்றி எனக்கு நன்றாக தெரியும்.

அந்த தைரியம் தற்போது உள்ள உங்க தலைவனுக்கும் இல்லை.. உங்க யாருக்கும் இல்லை. குஷ்பு எப்பவும் நேரடியாக பேசுவா. சுற்றி வளைச்சு பேசும் பழக்கம் குஷ்புவுக்கு கிடையாது. தமிழகத்தில் இருக்கிற பெண்களுக்கு நீங்க ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்கு பதிலாக டாஸ்மாக் குறைத்தீர்கள் என்றால், அவர்கள் பல ஆயிரம் சேமித்து அவர்களின் குடும்பத்தை நன்றாக சந்தோஷமாக தலைநிமிர்ந்து அவர்களால் குடும்பத்தை நடத்த முடியும். இந்த விஷயத்தை தான் நான் சொன்னேன். இதை திசை திருப்பி, பெண்களை கேவலபடுத்தும் வகையில் நான் பேசியதாக சொல்கிறீர்கள்.

பெண்களை கேவலபடுத்துவதாக, அவதூறாக பேசுவதாக தப்பான விஷயத்தை பரப்புவது திமுக.,வின் டிஎன்ஏ. குஷ்புவின் டிஎன்ஏ கிடையாது. இதை திமுக.,வில் இருக்கும்போது பார்த்து இருக்கேன். வெளியே வந்த பிறகு பார்த்து கொண்டு இருக்கேன். தற்போதும் பார்த்து கொண்டு இருக்கேன். இந்த பூச்சாண்டி வேலையெல்லாம் குஷ்புக்கிட்ட காட்டாதீர்கள்.நான் தவறு செய்தால் சின்ன குழந்தையாக இருந்தாலும் கீழே விழுந்து மன்னிப்பு கேட்பேனே தவிர நான் பயந்து ஓட மாட்டேன்.

அரசியல் நாகரீகம், மேடை நாகரீ்கம், தைரியமாக பேசக்கூடிய விஷயங்கள் வைத்து தைரியமாக பேச வேண்டும். இந்த எல்லாம் எனக்கு சொல்லிக் கொடுத்தது என்னுடைய ஆசான் கருணாநிதி. இதை நீங்கள் மறந்து விட்டீர்கள். ஆனா நான் மறக்க வில்லை. மறக்கவும் மாட்டேன். ஒருவேலை நான் தப்பாக பேசினேன் என நீங்க நினைத்தால் என்னை சுட்டி காட்டாதீங்க. எங்க சுட்டி காட்ட வேண்டும் என நீங்க நினைத்து பாருங்கள்.

சொல்லி கொடுத்த விஷயங்கள் என்றைக்கும் நான் மறக்க மாட்டேன். மாதா பிதா குரு தெய்வம்னு சொல்வோம். என்னுடைய குரு எனக்கு என்ன சொல்லிக் கொடுத்தாரோ அதை என்றைக்கும் மறக்க மாட்டேன். அவரை அவமானப்படுத்துற மாதிரி கேவலபடுத்துற மாதிரி என்றைக்கும் பேச மாட்டேன். பேசியிருக்க மாட்டேன். அது எனக்கு தெரியாது. ஆனால், உங்க புதுத்தலைவனுக்கு கீழே நீங்க எல்லாரும் இப்படி பேசணும்னு கட்டாயம் உள்ளது. அது எனக்கும் புரியும். உங்க மேல கோபம் கிடையாது. பரிதாபமாக இருக்கிறது.

இவ்வளவு விஷயம் செய்வதற்கு பதிலாக ஒரே விஷயம். நாங்க இவ்வளவு நல்லது செய்து இருக்கோம். மத்திய அரசு நிதியில் இருந்து இவ்வளவு பணம் வந்தது. அதை வைத்து இவ்வளவு நல்லது செய்து இருக்கோம். பிரதமர் மோடி எங்களுக்கு இவ்வளவு விஷயங்கள் எங்களுக்கு செய்து கொடுத்து உள்ளார். அதனால் அந்த நல்ல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து இருக்கிறோம்-ன்னு அதை சொல்லுங்கள். அதை சொல்ல மாட்டீர்கள். அதை சொல்வதற்கு, பேசுவதற்கு தைரியம் வேண்டும். தைரியம் உங்களுடைய பட்டியலில் இல்லை.

கல்வீசுவீர்கள். புடவையை பிடித்து இழுப்பீர்கள். பெண்களை கேவலமாக பேசுவீர்கள். கீழ்த்தரமாக நடந்து கொள்வீர்கள். ஆனால், பெண்களை சமுதாயத்தில் கொண்டு போய் அழகு பார்க்க வேண்டும் என்ற எண்ணம் திமுக.,வில் இல்லை. நான் என்ன செய்ய வேண்டியதை நான் செய்து கொண்டு இருக்கேன். என் மக்களுக்கு தெரியும். எந்தளவு பெண்களுக்காக போராடி வருகிறேன். பேசி வருகிறேன். அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறேன் என்பது என்னை பின் தொடர்பவர்களுக்கும் தெரியும். இவ்வாறு அந்த வீடியோவில் குஷ்பு கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.






      Dinamalar
      Follow us