ADDED : ஆக 12, 2025 03:20 AM
சென்னை: அண்ணா பல்கலை கீழ் இயங்கும், இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, 2025 - 26ம் கல்வியாண்டு கவுன்சிலிங், 'ஆன்லைனில்' நடந்து வருகிறது. இரண்டு சுற்று கவுன்சிலிங் முடிவடைந்துஇருக்கிறது.
இதில், பி.இ., - பி.டெக்., இடங்கள் பெற்ற, மாணவ, மாணவியருக்கான, முதலாம் ஆண்டு வகுப்புகள், வரும் 18 ம் தேதி துவங்கும் என, அண்ணா பல்கலை அறிவித்தது.
இதையொட்டி, மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சிகள், நேற்று நடப்பதாக இருந்தது. ஒரு வாரம் இந்த பயிற்சிகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், நிர்வாக காரணங்களுக்காக, அந்த பயிற்சி வகுப்புகள் நிறுத்தப்பட்டன.
திருத்தி அமைக்கப்பட்ட கல்வியாண்டுக்கான அட்டவணை, விரைவில் வெளியிடப்படும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. இதனால், வரும் 18ம் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்குமா என கேள்வி எழுந்துள்ளது.