ADDED : மே 21, 2024 06:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: தமிழகம் முழுதும், பரவலாக கோடை மழை பெய்வதால் மின்நுகர்வு, 7,282 மெகா வாட் சரிந்துள்ளது. தமிழகத்தின் அனல், புனல், காற்றாலை, சோலார், மத்திய மின் தொகுப்பில் மொத்தம், 19,064 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். நடப்பாண்டு வழக்கத்தை விட கோடைக்காலத்தில் வெப்ப நிலை அதிகரித்தது.
அதற்கேற்ப தமிழகத்தில் மின்நுகர்வு உயர்ந்தது. கடந்த, 2ல் மின் நுகர்வு, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக, 20,830 மெகா வாட்டாக அதிகரித்தது. ஒரு வாரமாக, வெயிலின் தீவிரம் குறைந்து பரவலாக கோடை மழை பெய்கிறது.
இதனால் தமிழகத்தின் மின்நுகர்வு குறைந்துள்ளது. நேற்று முன்தினம், 13,617 மெகா வாட்டாக இருந்த மின்நுகர்வு நேற்று, 13,548 மெகா வாட்டாக சரிந்தது. அதிகபட்ச மின்நுகர்வை விட நேற்று, 7,282 மெகா வாட் மின்நுகர்வு சரிந்தது குறிப்பிடத்தக்கது.

