உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 10, 2026 05:41 AM

அ நிறம் | அளவு
சென்னை: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில், இந்திய அணுமின் கழகத்திற்கு சொந்தமான அணுமின் நிலையம் உள்ளது.
அங்கு தலா, 1,000 மெகாவாட் திறன் உடைய இரு அணு உலைகளில், மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில், முதலாவது அணு உலையில், ஜெனரேட்டர் பழுது காரணமாக, நேற்று முன்தினம் இரவு முதல், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து, தமிழகத்திற்கு தினமும், 1,152 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
