உள்ளடக்கத்திற்கு செல்ல
வேலுார் கோட்டை மசூதியில் தொழுகை? த.வெ.க.,வுக்கு எதிர்ப்பு
வேலுார் கோட்டை மசூதியில் தொழுகை? த.வெ.க.,வுக்கு எதிர்ப்பு
ADDED : செப் 04, 2026 07:12 AM
அ நிறம் | அளவு
வேலுார்: தமிழக சட்டசபையில் பேசிய வேலுார் த.வெ.க., - எம்.எல்.ஏ., வினோத் கண்ணன், 'வேலுார் கோட்டையில் உள்ள மசூதியில் தொழுகை நடப்பதில்லை. தொல்லியல் துறை அனுமதி பெற்று தொழுகை நடத்த உரிமை பெற்று தர வேண்டும்' என்றார்.
இதற்கு ஹிந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின், மாநில நிர்வாக குழு உறுப்பினர் மகேஷ் கூறுகையில், ''அற்ப அரசியலுக்காக, வேலுாரில் மத மோதல்களை உருவாக்க எம்.எல்.ஏ., வினோத் கண்ணன் நினைக்கிறார். வேலுார் கோட்டையில் உள்ள கட்டடம், ஆங்கிலேயர் காலத்து தபால் அலுவலகம் தானே தவிர, மசூதி அல்ல.
''வேலுார் கோட்டை வளாகத்தில், ஏற்கனவே இரண்டு மசூதிகள் உள்ளன. எனவே, ஓட்டு அரசியலுக்காக மக்களை துாண்டி விட வேண்டாம்,'' என்றார்.
