மின் விபத்துக்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
மின் விபத்துக்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
ADDED : நவ 29, 2024 11:35 PM
மின் விபத்தை தவிர்க்க வழிமுறைகள்
மழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய மின்சார பாதுகாப்பு வழிமுறைகள்:
மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள், மின்சார கேபிள்கள், மின்சார கம்பங்கள், 'பில்லர் பாக்ஸ்' மற்றும் 'டிரான்ஸ்பார்மர்'கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும்
சாலைகளிலும், தெருக்களிலும் மின் கம்பங்கள் மற்றும் மின் சாதனங்கள் அருகே தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் நடக்கக் கூடாது
தாழ்வாக தொங்கும் மின்சார ஒயர்கள் அருகில் செல்வதையும், தொடுவதையும் தவிர்க்க வேண்டும்
ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம்
மின் ஒயர் இணைப்புள் திறந்த நிலையில் இல்லாமல், 'இன்சுலேசன் டேப்' சுற்றி பாதுகாப்பாக வைக்க வேண்டும்
வீடுகள் மற்றும் கட்டடங்களில் உள்ள ஈரப்பதமான சுவர்களில், கை வைப்பதை தவிர்க்க வேண்டும்.
மின் கசிவு, மின் அதிர்ச்சி ஏற்படும் நிகழ்வில், உடனே அருகில் உள்ள மின் வாரிய அலுவலகத்தை தொடர்புகொள்ள வேண்டும் அல்லது மின் வாரியத்தின், 24 மணி நேர சேவைக்கான, 94987 94987 என்ற மொபைல் போன் எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்.
இவ்வாறு மின் வாரியம் தெரிவித்துள்ளது.