ADDED : அக் 07, 2025 10:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவின் தாயார், அம்சவேணி, உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று (அக்.,07) காலமானார். அவருக்கு வயது 83.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா. இவர் சட்டசபை தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று (அக் 07) வயது மூப்பு காரணமாக, பிரேமலதாவின் தாயார், அம்சவேணி, உடல் நலக்குறைவால் காலமானார்.
இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.