தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/திருப்பரங்குன்றம் தீபத்துாணில் கார்த்திகை தீபம்; முதல் முறையாக இன்று ஏற்றப்படுகிறது

திருப்பரங்குன்றம் தீபத்துாணில் கார்த்திகை தீபம்; முதல் முறையாக இன்று ஏற்றப்படுகிறது

திருப்பரங்குன்றம் தீபத்துாணில் கார்த்திகை தீபம்; முதல் முறையாக இன்று ஏற்றப்படுகிறது

8


UPDATED : நவ 24, 2026 05:31 PM

ADDED : நவ 24, 2026 04:35 PM

Follow on GoogleFavourite on Google

8

UPDATED : நவ 24, 2026 05:31 PM ADDED : நவ 24, 2026 04:35 PM


8
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று திருப்பரங்குன்றம் தீபத்துாணில் சற்று நேரத்தில் தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்கான உறுதியை உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரணையில் கலெக்டர் தெரிவித்துள்ளார். இது தவெக அரசின் சிறப்பான முடிவு என்று பக்தர்கள் மகிழ்ச்சி அடைவர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்தாண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரித்த உயர்நீதிமன்றமும், உயர்நீதிமன்ற பெஞ்சும் தீபம் ஏற்ற உத்தரவிட்டன. ஆனால் திமுக அரசு தீபம் ஏற்றவில்லை.

இந்நிலையில் இந்தாண்டு தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதி, இந்தாண்டு மட்டும் தீபம் ஏற்ற அனுமதி அளித்தார். எனினும் தீபம் ஏற்றப்படுமா, இல்லையா என்பது பற்றி அரசு தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

இதற்கிடையே உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று காலை முதல் வழக்கு விசாரணை நடந்தது. மதுரை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா ஆஜரானார். அவரிடம் தீபம் ஏற்றப்படுமா என்பது பற்றி நீதிபதிகள் மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பினர். உச்சநீதிமன்ற உத்தரவை அமல் செய்யவே 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதாகவும், தீபம் ஏற்றும் உத்தரவு செயல்படுத்தப்படும் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் தீபத்துாணில் தீபம் ஏற்றப்படுவது உறுதியாகியுள்ளது. தவெக அரசின் இந்த முடிவால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைவர் என்று எதிர்பார்க்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us