sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அபுதாபியில் முதல் ஹிந்து கோவில்; பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

/

அபுதாபியில் முதல் ஹிந்து கோவில்; பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

அபுதாபியில் முதல் ஹிந்து கோவில்; பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

அபுதாபியில் முதல் ஹிந்து கோவில்; பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்


UPDATED : பிப் 11, 2024 03:12 AM

ADDED : பிப் 10, 2024 11:29 PM

Google News

UPDATED : பிப் 11, 2024 03:12 AM ADDED : பிப் 10, 2024 11:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி, பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக, நாளை மறுநாள் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு செல்கிறார். அங்குள்ள அபுதாபி நகரில் கட்டப்பட்டுள்ள, சுவாமி நாராயணன் கோவிலை திறந்து வைக்கிறார்.

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு கடந்த 2015ல் பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அப்போது அவர், அங்கு வசிக்கும் ஹிந்து மதத்தினருக்காக, அபுதாபியில் கோவில் கட்ட வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்று, பிரமாண்ட கோவில் கட்ட எமிரேட்ஸ் அரசு அனுமதி அளித்தது.

கோவில் கட்டுவதற்காக அபுதாபியின் ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா பகுதியில், 55,000 சதுர அடி நிலமும் வழங்கப்பட்டது.

கோவில் கட்டுமான பணிகள், குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரைச் சேர்ந்த, 'பாப்ஸ்' எனப்படும், போச்சசன்வாசி ஸ்ரீ அக் ஷார் புருஷோத்தமன் சுவாமி நாராயண் சன்ஸ்தா என்ற அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்த அமைப்பினர் சுவாமி நாராயணன் கோவிலின் கட்டுமான பணிகளை முடித்ததையடுத்து, அதன் திறப்பு விழா வரும், 14ல் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, 13ல் அபுதாபி செல்கிறார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத்தின் போது, அந்த நாட்டு அதிபர் ேஷக் முகமது பின் ஜயீத் அல் நயனை சந்தித்து, இரு தரப்பு உறவு குறித்து பேசுகிறார். மேலும், அங்கு வசிக்கும் இந்தியர்களிடையே பிரதமர் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us