ADDED : ஜன 30, 2024 12:49 PM

சென்னை: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் 'என் மண் என் மக்கள்' நடைப்பயணத்தின் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக பிப்.18ம் தேதி பிரதமர் மோடி வருகை தர உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தமிழகம் வந்தார். சென்னையில் கேலோ இந்தியா போட்டிகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து தமிழகத்தில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். திருச்சி ஸ்ரீரங்கம் கோயில், ராமநாதபுரம் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இந்நிலையில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வர உள்ளார்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ''என் மண் என் மக்கள்'' என்ற பாதயாத்திரையை கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி துவங்கினார். இந்த பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரத்தில் துவக்கி வைத்தார். பின்னர் அண்ணாமலை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பாதயாத்திரை மேற்கொண்டார்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' நடைப்பயணத்தின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.