விஜயகாந்த் குறித்து தமிழில் பிரதமர் மோடி உருக்கமான பதிவு!
விஜயகாந்த் குறித்து தமிழில் பிரதமர் மோடி உருக்கமான பதிவு!
ADDED : ஜன 03, 2024 12:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ‛‛ எனது அன்பான நண்பரை இழந்துள்ளேன்'' என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் குறித்து பிரதமர் மோடி தமிழில் எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: விஜயகாந்தின் மறைவால் ஏராளமான மக்கள் தாங்கள் ரசித்துப் போற்றிய நடிகரையும், பலர் தங்களது பாசத்திற்குரிய தலைவரையும் இழந்திருக்கிறார்கள். ஆனால் நான் எனது அன்பான நண்பரை இழந்துள்ளேன்.
கேப்டன் சிறப்பு மிக்கவராக திகழ்ந்தது தொடர்பாக என்னுடைய கருத்துகளை பல்வேறு நாளிதழ்களில் விரிவாக எழுதியுள்ளேன். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மறைந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி எழுதியுள்ள கட்டுரை!https://www.dinamalar.com/news_detail.asp?id=3518422