sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

எத்தியோப்பியாவில் பிரதமர் நரேந்திர மோடி

/

எத்தியோப்பியாவில் பிரதமர் நரேந்திர மோடி

எத்தியோப்பியாவில் பிரதமர் நரேந்திர மோடி

எத்தியோப்பியாவில் பிரதமர் நரேந்திர மோடி


UPDATED : டிச 18, 2025 11:27 AM

ADDED : டிச 18, 2025 03:39 AM

Google News

UPDATED : டிச 18, 2025 11:27 AM ADDED : டிச 18, 2025 03:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அடிஸ் அபாபா: அரசு முறை பயணமாக, மேற்காசிய நாடான ஜோர்டானுக்குச் சென்ற பிரதமர் மோடி, அடுத்ததாக கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவிற்கு சென்றார். அங்கு அவர், பார்லிமென்டில் உரை உட்பட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து, மற்றொரு மேற்காசிய நாடான ஓமனுக்குச் சென்றுள்ளார். எத்தியோப்பியாவில் நடந்த சுவாரசியமான நிகழ்ச்சிகள்...

உயரிய விருது!

பிரதமர் நரேந்திர மோடிக்கு, எத்தியோப்பியாவின் உயரிய விருதான 'தி கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா' வழங்கப்பட்டது. இந்த உயரிய விருதை பெறும் முதல் சர்வதேச தலைவர் மற்றும் அரசு தலைவர் என்ற பெருமையை பெற்றார் மோடி. இது, உலக நாடுகளிடம் இருந்து அவர் பெறும் 28வது விருதாகும். கடந்தாண்டு இந்த விருதை எத்தியோப்பியா அறிமுகப்படுத்தியது. முதல் விருதை, 'மைக்ரோசாப்ட்' இணை நிறுவனர் பில் கேட்ஸ் பெற்றார்.



சிங்கங்களின் நாடு

எத்தியோப்பியாவின் பார்லிமென்டின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரை: சிங்கங்களின் தாயகம் எத்தியோப்பியா. நான் இங்கு இருப்பதை என் தாயகத்தில் இருப்பது போல் உணர்கிறேன். ஏனென்றால், இந்தியாவில் என் சொந்த மாநிலமான குஜராத்தும் சிங்கங்களின் தாயகமாக விளங்குகிறது. இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களின் சார்பில், வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவின் தேசிய கீதமும், எத்தியோப்பியாவின் தேசிய கீதமும், நாட்டின் நிலத்தை 'அன்னை' என குறிப் பிடுகின்றன. அவை நம் பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றில் பெருமை கொள்ளவும், நம் தாய்நாட்டை பாதுகாக்கவும் நம்மை துாண்டுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.



மோடிக்கு கார் ஓட்டிய பிரதமர்

எத்தியோப்பியா சென்ற பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு பிரதமர் அபி அகமது அலி, விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளித்தார். இதன்பின், மோடியை தன் காரில் ஹோட்டலுக்கு அழைத்து சென்றார். பிரதமர் அபியே காரை ஓட்டினார். செல்லும் வழியில், அதிகாரப்பூர்வ பயணத் திட்டத்தில் இல்லாத இடங்களான அறிவியல் அருங்காட்சியகம் மற்றும் நட்பு பூங்காவிற்கு அபி அகமது அலி அழைத்துச் சென்று காண்பித்தார். நோபல் பரிசு பெற்ற எத்தியோப்பியா பிரதமரின் இந்நடவடிக்கை, இந்தியா - எத்தியோப்பியா உறவுகளில் வளர்ந்து வரும் நெருக்கத்தின் பிரதிபலிப்பாக பார்க்கப்படுகிறது.



ஒலித்தது வந்தே மாதரம்!

எத்தியோப்பியா பிரதமர் அபி அளித்த விருந்தின் போது, அந்நாட்டின் கலைஞர்கள் நம் நாட்டின், வந்தே மாதரம் பாடலை உணர் வுப்பூர்வமாக பாடியதை கேட்ட மோடி, கைகளை தலைக்கு மேல் உயர்த்தி கைதட்டி உற்சாகப்படுத்தினார். வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு, 150வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வேளையில், வெளிநாட்டு மண்ணில் இப்பாடல் ஒலிக்கப்பட்டது, தமக்கு மிகுந்த மனநிறைவை தருவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.








      Dinamalar
      Follow us