நடிகை ரஞ்சிதா பிரதமராம்...: இல்லாத நாட்டில் பதவி அளித்த நித்தியானந்தா
நடிகை ரஞ்சிதா பிரதமராம்...: இல்லாத நாட்டில் பதவி அளித்த நித்தியானந்தா
UPDATED : ஜூலை 06, 2023 11:44 AM
ADDED : ஜூலை 06, 2023 11:43 AM

சென்னை: ஹிந்துக்களுக்கு என தனி நாடாக கைலாசாவை உருவாக்கியுள்ளதாகவும், அதில் அதிபராக இருப்பதாகவும் கூறிவரும் சாமியார் நித்தியானந்தாவின் தலைமை சீடரான நடிகை ரஞ்சிதாவை பிரதமராகவும் அங்கீகரித்துள்ளது வைரலாகியுள்ளது.
சாமியார் நித்தியானந்தா மீது பாலியல், கடத்தல், கற்பழிப்பு என பல வழக்குகள் உள்ளன. போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் 2019ல் தலைமறைவானார். நித்யானந்தாவின் தலைமை சீடர்களில் ஒருவராக இருந்தவர் நடிகை ரஞ்சிதா.
இதற்கிடையே கைலாசா என்னும் தீவுக்கு சென்றுவிட்டதாக நித்தியானந்தாவே கூறியிருந்தார். அதனை ஹிந்துக்களுக்கான நாடாக உருவாக்கியுள்ளதாகவும் அவரே கூறியிருந்தார்.
தங்களுக்கென தனியாக அரசு, தனிக் கொடி, பாஸ்போர்ட், நாணயம் உள்ளதாகவும், அந்நாட்டின் அதிபராக கூறிக்கொள்ளும் நித்தியானந்தா அறிவித்தார். ஆனால் அந்த நாடு எங்கு இருக்கிறது என்பது இன்னும் ரகசியமாக இருக்கிறது. அங்கிருந்து அவ்வபோது வீடியோ மூலம் சொற்பொழிவும் ஆற்றி, அதனை தனது பிரத்யேக யுடியூப் சேனலில் பதிவேற்றி வந்தார்.
இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. எங்கிருக்கிறது என்றே தெரியாத ஒரு நாட்டிற்கு தனிக் கொடி, பாஸ்போர்ட், நாணயம் எல்லாம் ஓவராக இருக்கும் நிலையில், அந்த நாட்டிற்கு அதிபர், பிரதமர் எல்லாம் அறிவிக்கப்பட்டு விட்டனர்.