ஸ்ரீரங்கத்தில் பிரதமரின் தரிசனம் அற்புதமாக அமைந்தது: அண்ணாமலை
ஸ்ரீரங்கத்தில் பிரதமரின் தரிசனம் அற்புதமாக அமைந்தது: அண்ணாமலை
ADDED : ஜன 20, 2024 04:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரத்திற்கு சென்ற பிரதமர் மோடியுடன் வந்த பா.ஜ. மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது: பிரதமர் மோடி தமிழகத்தில் இரண்டாம் நாள் சுற்றுப்பயணமாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வந்துள்ளார். சுவாமி தரிசனம் செய்த பிரதமர், கம்பராமாயணம் அரங்கேற்ற மண்டபத்தில் அமர்ந்து, கம்பராமாயணம் கேட்டார்.
இங்கிருந்து ராமேஸ்வரம் செல்லும் பிரதமருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். பிரதமர் மோடிக்கு அரங்கப் பெருமான் அருள் எப்போதும் இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அதற்கேற்ப இன்றைய தரிசனமும் அமைந்திருந்தது. ஸ்ரீரங்கத்தில் பிரதமரின் தரிசனம் அற்புதமாக அமைந்தது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.