தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டம் மீண்டும் துவக்கம்

 பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டம் மீண்டும் துவக்கம்

 பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டம் மீண்டும் துவக்கம்


ADDED : ஜூன் 12, 2026 03:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 12, 2026 03:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: மத்திய, மாநில அரசுகள் இணைந்து, பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தை செயல் படுத்தி வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் காய்கறிகள், பூச்செடிகள், தென்னை, பழச்செடிகள் சாகுபடிக்கு, சிறு, குறு விவசாயிகளுக்கு ஐந்து ஏக்கர் வரை இலவசமாகவும், மற்ற விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியமும் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்க, 25,000 ரூபாய்; பண்ணை குட்டைகள், நிலத்தடிநீர் சேமிப்பு கட்டமைப்புகளை அமைக்க, 40,000 ரூபாய்; நீரை வயல்களுக்கு கொண்டு செல்லும் குழாய்களுக்கு, 10,000 ரூபாய்; 'டீசல் பம்ப் மோட்டார் செட்' அல்லது மின் மோட்டார்கள் வாங்க, 15,000 ரூபாய் வரை மானியம் வழங்கப் படுகிறது.

சட்டசபை தேர்தல் நடத்தை விதிகளால் நிறுத்திவைக்கப்பட்ட இத்திட்டத்தை, வேளாண் துறையினர் மீண்டும் துவக்கியுள்ளனர். பயனாளிகள் தேர்வை விரைந்து முடிக்க, அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us