'பிரதமரின் தமிழக பயணம் ஆன்மிக பணி' : வாசன் கருத்து
'பிரதமரின் தமிழக பயணம் ஆன்மிக பணி' : வாசன் கருத்து
ADDED : ஜன 22, 2024 06:26 AM
திண்டுக்கல் : ''பிரதமர் நரேந்திர மோடி தமிழக வருகை ஆன்மிக பணி. இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் கிடையாது'' என திண்டுக்கல்லில் த.மா.கா., தலைவர் வாசன் கூறினார்.
அவர் கூறியதாவது:
தமிழக போக்குவரத்துக் கழக ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். தொழிலாளர்கள் சார்ந்த அரசாக செயல்பட வேண்டும். விளையாட்டுத்துறையில் இந்தியா முழுவதும் பெருமைப்படுத்த வேண்டும்.
விளையாட்டுத்துறையில் தமிழகத்தை அடித்தளமாக தேர்ந்தெடுத்து மாற்றாந்தாய் மனப்பான்மை இல்லாமல் எதிர்க்கட்சி ஆட்சி இருந்தாலும் பிரதமர் மோடி கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை துவக்கினார்.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிேஷகத்திற்காக ஆன்மிகப் பணியாக தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி வந்தார்.
அவரின் தேசபக்திக்கும் தெய்வ பக்திக்கும் எடுத்துக்காட்டு. அரசியலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. பிரதமரை சந்திப்பது எங்களின் கடமை. நாங்களும் தேர்தல் பணியை துவங்கிஉள்ளோம் என்றார்.