தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 'ப்ரிமோரா கலெக்ஷன்' ஜோயாலுக்காஸ் அறிமுகம்

 'ப்ரிமோரா கலெக்ஷன்' ஜோயாலுக்காஸ் அறிமுகம்

 'ப்ரிமோரா கலெக்ஷன்' ஜோயாலுக்காஸ் அறிமுகம்


ADDED : ஆக 26, 2026 03:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2026 03:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ைஹதராபாத்: ஜோயாலுக்காஸ், வண்ணமயமான அழகிற்கும், தனது துணையிடம் வாழ்நாள் முழுதும் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பிற்கும் பெயர் பெற்ற, 'ஹார்ன்பில்' பறவையால் ஈர்க்கப்பட்ட பிரத்யேக டிசைனர் வைர நகை தொகுப்பான, 'ப்ரிமோரா'வை இம்மாதம், 22ம் தேதி முதல் உலகம் முழுதும் உள்ள ேஷாரூம்களில் அறிமுகம் செய்துள்ளது.

நுணுக்கமான கைவினைத்திறனும், அழகிய விபரங்களும் உடைய, 'ப்ரிமோரா' தொகுப்பில், வைர நெக்லஸ்கள், காதணிகள், வளையல்கள், பெண்டன்ட்கள், மோதிரங்களின் நேர்த்தியான தொகுப்பு இடம்பெற்றுள்ளன.

இது குறித்து, ஜோயாலுக்காஸ் குழுமத் தலைவர் ஜாய் ஆலுக்காஸ் கூறியதாவது:

ஜோயாலுக்காஸில், ஒவ்வொரு நகை தொகுப்பும் எங்கள் வாடிக்கையாளர்களின் மனதை ஆழமாக தொடும் ஒரு கதையில் இருந்தே தொடங்குகிறது.

ப்ரிமோராவுக்காக, விசுவாசம் மற்றும் இணைந்திருப்பதற்கான காலத்தால் அழியாத அடையாளமான, இருவாட்சி பறவையின், அசாதாரண அர்ப்பணிப்பில், நாங்கள் உத்வேகம் கண்டோம்.

நம் வாழ்க்கையை வளப்படுத்தும் உறவுகளை கொண்டாடவும், அதன் அழகை தாண்டிய அர்த்தத்தை தாங்கிய நகைகளை உருவாக்கவும், இந்த தொகுப்பின் வாயிலாக விரும்பினோம்.

உலகம் முழுதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ப்ரிமோராவை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்; அது, அவர்களின் மிக மதிப்புமிக்க நினைவுகளின் அன்பான ஒரு பகுதியாக மாறும் என, நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜோயாலுக்காஸ் நிறுவனத்தின் பிரத்யேக டிசைனர் வைர நகை தொகுப்பான, 'ப்ரிமோரா'வை, திரைப்பட நடிகை மாள்விகா சர்மா அறிமுகம் செய்து வைத்தார். உடன், ஜோயாலுக்காஸ் நிர்வாக இயக்குநர் தாமஸ் மாத்யூ, கொள்முதல் பிரிவு தலைவர் சுரேஷ், மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் அனீஷ் வர்கீஸ் உள்ளிட்டோர். இடம்: ைஹதரபாத், தெலுங்கானா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us