ADDED : ஆக 11, 2011 10:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:கோவை சிறையில் கைதி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.கன்னியாகுமரி மாவட்டம், வெட்டூர்ணிமடத்தைச் சேர்ந்தவர் அருள்ராஜ், 26; டிரைவர்.
2006ல், குனியமுத்தூரில் நடந்த விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்டார். கோர்ட் இவருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.கடந்த, 2009 முதல் சிறையில் இருந்த இவர், நேற்று மாலை சமையல் அறையை ஒட்டியுள்ள காஸ் செல்லும் குழாயில், லுங்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.

