தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஒரே நாளில் கைதிகள் 2 பேர் தப்பியோட்டம்; ஒருவர் கோவை, மற்றொருவர் சென்னை!

ஒரே நாளில் கைதிகள் 2 பேர் தப்பியோட்டம்; ஒருவர் கோவை, மற்றொருவர் சென்னை!

ஒரே நாளில் கைதிகள் 2 பேர் தப்பியோட்டம்; ஒருவர் கோவை, மற்றொருவர் சென்னை!

2


UPDATED : அக் 31, 2026 01:54 PM

ADDED : அக் 31, 2026 09:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2026 01:54 PM ADDED : அக் 31, 2026 09:43 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் கோவையில் கைதி ஒருவரும், சென்னையில் கைதி ஒருவரும் என இருவர் தப்பிய ஓடிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கோவை அன்னூர் போலீஸ் நிலைய வழக்கில் கைது செய்யப்பட்ட ராகவன் (25), சிறை வாசலில் இருந்து தப்பி ஓடியுள்ளார். இவர் கடந்த இரண்டரை மாதத்துக்கு முன்பு கர்நாடக போலீசார் ராகவனை கோவைக்கு ஒரு வழக்குக்காக அழைத்து வந்தனர். அப்போது அன்னூர் அடுத்த கணுவ கரையில் இயற்கை உபாதை என போலீஸ் வேனிலிருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டார். இது குறித்து கர்நாடக போலீஸ் எஸ்ஐ கொடுத்த புகாரின் பேரில் அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த வழக்கில் நேற்று இரவு இவர் அன்னூர் போலீசாரிடம் பிடிபட்டார். அன்னூர் போலீஸ் எஸ்ஐ முத்தலீப் மற்றும் 3 போலீசார் அவரை நள்ளிரவு ஒரு மணிக்கு மத்திய சிறையில் அடைக்க அழைத்து சென்றனர். அப்போது சிறை வாசலில் கைதி ராகவன் தப்பி ஓட்டம் பிடித்தார். போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தப்பிய கைதி ராகவனை கைது செய்வதற்காக உயர் காவல் அதிகாரிகளின் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ட்ரோன் கண்காணிப்பு, சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் தீவிர வாகனச் சோதனைகளின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சஸ்பெண்ட்!

தப்பிச் சென்ற கைதியை விரைவில் கைது செய்வதற்கு ஏதுவாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. கைதியைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் பணியின்போது ஏற்பட்ட கவனக்குறைவுக்குப் பொறுப்பான நான்கு போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

முதியவர் தப்பியோட்டம்

சென்னை புழல் அருகே போக்சோ வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட டேவிட்சன் (60) என்பவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு போலீஸ் பாதுகாப்பில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.



சிறப்பு வீடியோ!

கோவை கைதி தப்பி ஓட்டம்; தமிழகத்தில் தொடரும் அவலம்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us