sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் 'கிரெடிட் கார்டு' வழங்க தனியார் வங்கிகள் திடீர் தயக்கம்: அரசு மசோதாவால் கலக்கம்

/

தமிழகத்தில் 'கிரெடிட் கார்டு' வழங்க தனியார் வங்கிகள் திடீர் தயக்கம்: அரசு மசோதாவால் கலக்கம்

தமிழகத்தில் 'கிரெடிட் கார்டு' வழங்க தனியார் வங்கிகள் திடீர் தயக்கம்: அரசு மசோதாவால் கலக்கம்

தமிழகத்தில் 'கிரெடிட் கார்டு' வழங்க தனியார் வங்கிகள் திடீர் தயக்கம்: அரசு மசோதாவால் கலக்கம்

4


ADDED : மே 29, 2025 02:19 AM

Google News

ADDED : மே 29, 2025 02:19 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: தமிழக சட்டசபையில் 'கடன் வசூல் ஒழுங்கு மசோதா' நிறைவேற்றிய பின், 'தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு கிரெடிட் கார்டு வழங்க வேண்டாம்' என, வடமாநிலத்தைச் சேர்ந்த சில தனியார் வங்கிகள் முடிவு செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

மக்களின் தேவையை அறிந்திருக்கும் பணக்கடன் வழங்கும் பல நிறுவனங்கள், 'சிபில் ஸ்கோர் தேவையில்லை; நாங்கள் கடன் தருகிறோம்' என்று துவங்கி, குறிப்பிட்ட, 'லிங்க்' பயன்படுத்தினால், கடன் பெறுவது எளிது போன்ற பல்வேறு நடைமுறைகளில் பணம் கொடுத்து வருகின்றன.

கடன் சுமை


உடனடியாக பணம் கிடைக்கிறதே என்ற ஆவலில், பணத்தேவையுள்ள பலர் இதில் சிக்கி, கடன் சுமைக்கு ஆளாகின்றனர்.

கடன் கொடுத்த நிறுவனங்களுக்கு, குறிப்பிட்ட காலத்தில் பணம் செலுத்தவில்லை என்றால், வீட்டுக்கு வந்து மிரட்டுவது, அவமதிப்பது, அவர்கள் செல்லும் இடங்களில் பின்தொடர்வது, அவர்களுக்கு சொந்தமான அல்லது பயன்படுத்தும் சொத்துகளில் தலையிடுவது, மன உளைச்சல் தரும் வகையில் நடந்து கொள்வது போன்ற அத்துமீறும் செயல்களால், சிலர் தற்கொலை செய்த சம்பவங்கள் நடந்துள்ளன.

சில மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் துவங்கி, 'கிரெடிட் கார்டு' வழங்கும் சில தனியார் வங்கிகள் வழங்கும் கடன் வரை, பலர் இதில் அகப்பட்டு, வெளியே வர முடியாமல் அவதிப்படுகின்றனர்.

சிறை தண்டனை


ஏராளமான புகார்கள் வந்ததால், தமிழக அரசு இதில் தலையிட்டது. 'கடன் வசூல் ஒழுங்கு சட்டம்' என்ற பெயரில் தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

கடன் வசூலிப்பதில் அத்துமீறல்கள் வலுக்கட்டாய நடவடிக்கைகளாக கருதப்பட்டு, மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாய் அபராதம், தண்டனைக்குரிய குற்றங்களில் கைது செய்யப்படுவோர் ஜாமினில் வெளிவர முடியாது என, மசோதாவில் கடுமையான நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளன. இதை, பல்வேறு தரப்பினர் வரவேற்றுள்ளனர்.

ஆனால், கடன் வழங்கும் சிறு நிறுவனங்கள் மட்டுமின்றி, வடமாநிலங்களில் தலைமையிடம் வைத்துள்ள சில தனியார் வங்கிகளும் இந்த சட்டத்தால் கலங்கி போயிருப்பதாக தெரிகிறது.

தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு, 'கிரெடிட் கார்டு' வழங்க வேண்டாம் என அவை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.

தங்கள் நிறுவன 'கிரெடிட் கார்டு' வைத்திருப்பவர்கள், தொகை நிலுவை வைத்திருந்தால், கெடுபிடி இல்லாமல் விரைந்து வசூலிக்கவும், அந்த வங்கிகள் அறிவுறுத்தி உள்ளதாக, வங்கி ஊழியர் வட்டாரங்கள் தெரிவித்தன.






      Dinamalar
      Follow us