எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கத்தில் கால தாமதமின்றி விசாரணை: சபாநாயகர் பிரபாகர் உறுதி
எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கத்தில் கால தாமதமின்றி விசாரணை: சபாநாயகர் பிரபாகர் உறுதி
UPDATED : அக் 17, 2026 12:00 AM
ADDED : அக் 16, 2026 07:02 PM
சென்னை: ‘அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கக்கோரிய மனுக்கள் மீது, காலதாமதமும் இல்லாமல் விசாரணை நடக்கிறது’ என, சபாநாயகர் பிரபாகர் தெரிவித்தார்.
சென்னை, சேப்பாக்கம் எம்.எல்.ஏ., விடுதி வளாகத்தில் நேற்று நடந்த சட்டசபை நுாலக குழு கூட்டத்தில், சபாநாயகர் பிரபாகர் பங்கேற்றார்.
பின், அவர் அளித்த பேட்டி:
சட்டசபை நிகழ்வுகள் பற்றி, மக்கள் முழுமையாக தெரிந்துகொள்ள முடியாத நிலை, முன்பு இருந்தது. ஆனால், இப்போது நேரலை செய்வதால், சட்டசபையும், அரசும் எப்படி செயல்படுகிறது என்பதை மக்கள் பார்க்க முடிகிறது.
இளைய தலைமுறையினர் அரசியலில் ஆர்வம் காட்ட தொடங்கி விட்டனர். ‘அரசியல் நமக்கு வேண்டாம்’ என, ஒதுங்கி இருந்த மக்களுக்கு, சட்டசபை நேரலை, விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா தொடர்பாக, புகார் அளித்த நாளில் இருந்தே உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். சபாநாயகர் என்ற முறையில், இந்த விவகாரத்தில் நேர்மையாகவும், யாருடைய அச்சுறுத்தலும் இன்றி செயல்பட்டு வருகிறேன்.
அவர்கள் மீதான தகுதி நீக்க மனுக்கள் மீது, எந்தவித காலதாமதமும் இல்லாமல் விசாரணை நடந்து வருகிறது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி, இரண்டு மாதத்திற்குள் விசாரணை முடிந்து, முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
