தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பாதுகாப்புடன் விளக்கேற்ற அனுமதித்தால் பிரச்னை முடிந்துவிடும்: நா.த.க., சீமான்

பாதுகாப்புடன் விளக்கேற்ற அனுமதித்தால் பிரச்னை முடிந்துவிடும்: நா.த.க., சீமான்

பாதுகாப்புடன் விளக்கேற்ற அனுமதித்தால் பிரச்னை முடிந்துவிடும்: நா.த.க., சீமான்


ADDED : நவ 28, 2026 07:38 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2026 07:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

துாத்துக்குடி: ‘‘திருப்பரங்குன்றத்தில் பாதுகாப்புடன் விளக்கேற்றி வழிபட அனுமதித்தால், பிரச்னை முடிந்து விடும்,’’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

துாத்துக்குடியில் நேற்று அவர் அளித்த பேட்டி:

பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவோம் என கூறித்தான், முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்தார். ஆனால் இப்போது, ஒரு பாதுகாப்பான நாட்டில் தான், வாழ்கிறோமா என்ற கேள்வி எழுகிறது. கள்ளக்குறிச்சி த.வெ.க., – எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ் மீது முன்னரே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மாவட்ட கலெக்டருக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும்?

திருப்பரங்குன்றம் விவகாரத்தை, தி.மு.க., ஆட்சியிலும் சரி, தற்போதைய ஆட்சியிலும் சரி, இந்த அளவுக்கு பெரிதுபடுத்தியிருக்க கூடாது.

‘எம்மதமும் சிறந்தது, அவரவர் வழிபாட்டுக்கு வழிவிட வேண்டும்’ என்பது தான், எங்கள் கொள்கை. அங்குள்ள தர்காவில் வழிபடுவதற்கு எவ்வித இடையூறும் இருக்கக்கூடாது. அதேபோல், மற்றவர்கள் விளக்கேற்றி வழிபட விரும்பினால், அதற்கும் எந்தப் பிரச்னையும் இல்லாமல், அரசு உரிய பாதுகாப்பு வழங்கி இருக்க வேண்டும்.

அனைத்து மதங்களின் பெரியவர்களையும் அழைத்துப் பேசி, யாருக்கும் எந்தப் பிரச்னையும் ஏற்படாத வகையில் தீர்வு கண்டிருக்கலாம். முருகனுக்கு விளக்கேற்றுவதில் என்ன பிரச்னை? உரிய பாதுகாப்புடன் விளக்கேற்றி வழிபட அனுமதித்தால் பிரச்னை முடிந்துவிடும். தி.மு.க., ஆட்சியிலேயே இதற்கு தீர்வு கண்டிருக்க வேண்டும். அதைச் செய்யாமல் விட்டுவிட்டனர்.

இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us