sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தர்மத்திற்கு விரோதமாக செயல்பட்டால் கஷ்டங்கள் வரும்

/

தர்மத்திற்கு விரோதமாக செயல்பட்டால் கஷ்டங்கள் வரும்

தர்மத்திற்கு விரோதமாக செயல்பட்டால் கஷ்டங்கள் வரும்

தர்மத்திற்கு விரோதமாக செயல்பட்டால் கஷ்டங்கள் வரும்


ADDED : ஆக 13, 2011 12:51 AM

Google News

ADDED : ஆக 13, 2011 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : 'தவறான செயல்களாலும், தர்மத்திற்கு விரோதமாகச் செயல்படும் போதும் கஷ்டங்கள் வரும்'' என்று, காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினார்.

சென்னை பம்மலில் இயங்கி வரும், திருக்கோவில் வழிபாட்டுக் குழு கூட்டம், காஞ்சி சங்கர மடத்தில் நடந்தது.



இதில் கலந்து கொண்ட பக்தர்களின் கேள்விகளுக்கு, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பதிலளித்துப் பேசியதாவது: முன்பெல்லாம் குருக்கள் மற்றும் கிராம மக்கள், கோவிலுக்கு மிக அருகாமையில் தங்கி, திருக்கோவில் வழிபாடு செய்து வந்தனர். பின்னர், கோவில் வருமானம் போதுமானதாக இல்லாததால், வருமானத்தைத் தேடி கோவில் குருக்கள், நகரங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டனர். கிராம மக்களும் வசதியாக வீடுகளைக் கட்டிக்கொண்டு, பிற இடங்களுக்குச் சென்றுவிட்டனர். நாம் தான், கோவிலை விட்டு விலகிப்போய் விட்டோம். கோவில் அதே இடத்தில் தான் இருக்கிறது.



சிரத்தையும், பக்தியும் இருந்தால், திருக்கோயில் வழிபாட்டிற்கு தூரம் ஒரு பொருட்டல்ல. சிவ வழிபாட்டினால் கஷ்டம் வரும் என்பது, ஒரு தவறான நம்பிக்கை. உண்மையில் சிவ வழிபாட்டினால், நன்மையே கிட்டும். திடமாக நம்ப வேண்டும். மனிதனின் தவறான செயல்களாலும், தர்மத்திற்கு விரோதமாகச் செயல்படும் போதும், கஷ்டங்கள் வரும். அர்ச்சகர் இல்லாத நிலையில், பல நாட்களாக பூஜையே நடைபெறாத கோவில்களில், மற்றவர்கள் வழிபடும் போது, சுத்தமாகவும், தூய சிந்தனையோடும், இறைவனை வழிபட வேண்டும். இவ்வாறு, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினார். இக்கூட்டத்தில், உத்திரமேரூரிலிருந்தும், மதுராந்தகம் தாலுகாவைச் சேர்ந்த, 25 கிராமங்களிலிருந்தும் பக்தர்களும், பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருக்கோவில்கள் வழிபாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன், அனைவரையும் வரவேற்றார்.








      Dinamalar
      Follow us