தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மதுவிலக்கு சட்டத் திருத்தம்: கவர்னர் ரவி ஒப்புதல்

மதுவிலக்கு சட்டத் திருத்தம்: கவர்னர் ரவி ஒப்புதல்

மதுவிலக்கு சட்டத் திருத்தம்: கவர்னர் ரவி ஒப்புதல்


ADDED : ஜூலை 12, 2024 04:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2024 04:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மதுவிலக்கு சட்ட திருத்தத்திற்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது பூதாகரமான பிரச்னையாக மாறிய நிலையில், மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை தமிழக அரசு சட்டசபையில் கொண்டுவந்தது. சட்டத் திருத்தத்தின்படி, கள்ளச்சாராயம் விற்பனை செய்தால் ஆயுள் தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். கள்ளச்சாராயம் விற்பதற்கு பயன்படுத்தப்படும் அசையும் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும். படிப்படியாக முழு மதுவிலக்கு கொண்டு வரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த சட்ட மசோதா ஒருமனதாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அம்மசோதா கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மதுவிலக்கு திருத்த சட்ட மசோதாவிற்கு தற்போது கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து இச்சட்டம் அமலுக்கு வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us