sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்பது ஏமாற்று வேலை: ராமதாஸ்

/

மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்பது ஏமாற்று வேலை: ராமதாஸ்

மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்பது ஏமாற்று வேலை: ராமதாஸ்

மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்பது ஏமாற்று வேலை: ராமதாஸ்


ADDED : அக் 24, 2024 07:53 PM

Google News

ADDED : அக் 24, 2024 07:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்:பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் திண்டிவனம், தைலாபுரத்தில் அளித்த பேட்டி:

தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், மூடப்பட்ட மதுக்கடைகள் 500 ஆக இருந்தாலும், கடந்த மூன்றரை ஆண்டுகளில், 600 மனமகிழ் மன்றங்கள் தமிழகம் முழுதும் திறக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் விற்கப்படுவது போல், மனமகிழ் மன்றத்தில் அனைத்து மது வகைகளும் விற்கப்படுகிறது.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், 900 மனமகிழ் மன்றங்களும், தற்போது, தி.மு.க., ஆட்சியில் 600 என, மொத்தம் 1,500 மனமகிழ் மன்றங்கள் உள்ளன. தி.மு.க., ஆட்சியில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்பது ஏமாற்று வேலை.

கடந்த தீபாவளிக்கு, 467 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆண்டை விட, 20 சதவீதம் கூடுதலாக விற்க இலக்கு நிர்ணயிக்க, வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு முன்னும் பின்னும் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். இதேபோல், 1,500 மனமகிழ் மன்றங்களின் உரிமைகளை ரத்து செய்யவேண்டும்.

தமிழகத்தில், 39 மக்களவை தொகுதி 31 ஆக குறைக்கப்பட உள்ளதை எதிர்த்து, மத்திய அரசிடம் தான் போராடவேண்டும். அதைவிடுத்து, மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டும் என்பது தவறு. இப்போதே, அரசால், தரமான கல்வி, மருத்துவம் வழங்க இயலவில்லை.

ஓசூரில் டாடா நிறுவனத்தில் பணியாற்றிய 800 தமிழர்கள், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிறுவனத்தில் ஜார்க்கண்ட, உத்தரகாண்ட் மாநில தொழிலாளர்களே அதிகம் உள்ளனர். இந்நிலையில், தற்போது தமிழர்களை பணி நீக்கம் செய்துள்ளது கண்டிக்கதக்கது.

இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

பஸ்களை வாடகைக்கு எடுக்கக்கூடாது!


தீபாவளி உள்ளிட்ட விடுமுறை நாட்களில், அரசு போக்குவரத்து கழகம் சார்பில், தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவது புதிய ஊழலுக்கு வழிவகுக்கும்.ஒரு தனியார் பஸ் நாளொன்றுக்கு 600 கி.மீ., இயக்கப்பட்டால், போக்குவரத்துக் கழகத்திற்கு, 11 ஆயிரத்து, 400 ரூபாய் இழப்பீடு ஏற்படும்.புதிய பஸ்களை வாங்காமல், தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்குவதால், பஸ் கட்டணமும் உயர்த்தப்படும். காலப்போக்கில் அரசு போக்குவரத்து கழகம், தனியார் மயமாக்கப்படும். தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.
ராமதாஸ், நிறுவனர், பா.ம.க.,








      Dinamalar
      Follow us