ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 19 பேருக்கு பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு
ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 19 பேருக்கு பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு
UPDATED : ஜன 01, 2024 04:56 PM
ADDED : ஜன 01, 2024 04:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ஐ.பி.எஸ் அதிகாரிகள் 19 பேருக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மகேஷ் குமார், தேவராணி, உமா, திருநாவுக்கரசு, ஜெயந்தி, வெண்மதி, அரவிந்தன், விக்ரமன், சரோஜ்குமார் தாகூர், ராமர் ஆகியோருக்கு டி.ஐ.ஜி., ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இருவருக்கு ஏ.டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு
போலீஸ் ஐ.ஜி.,க்கள் ஆனந்தகுமார் சோமனி, தமிழ் சந்திரன் ஆகியோருக்கு ஏ.டி.ஜி.பி., ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஜெயஸ்ரீ, சாமுண்டீஸ்வரி, லட்சுமி, ராஜேஸ்வரி, ராஜேந்திரன், முத்துசாமி, மயில்வாகனன் ஆகிய 7 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு ஐ.ஜி.,யாக பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.