sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஹிந்து சமய அறநிலையத்துறையில் 15 உதவி ஆணையர்களுக்கு பதவி உயர்வு

/

ஹிந்து சமய அறநிலையத்துறையில் 15 உதவி ஆணையர்களுக்கு பதவி உயர்வு

ஹிந்து சமய அறநிலையத்துறையில் 15 உதவி ஆணையர்களுக்கு பதவி உயர்வு

ஹிந்து சமய அறநிலையத்துறையில் 15 உதவி ஆணையர்களுக்கு பதவி உயர்வு


UPDATED : பிப் 14, 2024 04:07 PM

ADDED : பிப் 14, 2024 03:05 PM

Google News

UPDATED : பிப் 14, 2024 04:07 PM ADDED : பிப் 14, 2024 03:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் 15 பேருக்கு துணை ஆணையர்களாக பதவி உயர்வுடன் இடமாற்றமும் வழங்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் முரளீதரன் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:

பதவி உயர்வு


கோவை உதவி ஆணையர் கருணாநிதி- வேலூர் துணை கமிஷனர் ஆகவும்

அறநிலையத்துறை ஆணையர் அலுவலக உதவி ஆணையர் -4 கணேசன்- சென்னை மண்டலம் -2 துணை ஆணையர் ஆகவும்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் விமலா - சேலம் துணை ஆணையர் ஆகவும்

நாகப்பட்டினம் உதவி ஆணையர் ராணி - நாகப்பட்டினம் துணை ஆணையர் ஆகவும்

தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் நந்தகுமார் - ஈரோடு துணை ஆணையர் ஆகவும்

மதுரை, கூடலழகர் கோயில் உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் செல்வி - தூத்துக்குடி துணை ஆணையர் ஆகவும்

தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர் - சிவகங்கை துணை ஆணையர் ஆகவும்

திருவள்ளூர் துணை ஆணையர் சித்ரா தேவி - மாங்காடு காமாட்சியம்மன் கோயில் துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் ஆகவும்

சிவகங்கை உதவி ஆணையர் செல்வராஜ் - திருவண்ணாமலை துணை ஆணையர் ஆகவும்

சேலம் சுகவனேஸ்வரர் கோயில் உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் சரவணன் - திருச்சி துணை ஆணையர் ஆகவும்

சோளிங்கர் லட்சுமி நரசிம்மசுவாமி கோயில் உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் ஜெயா - காஞ்சிபுரம் துணை ஆணையர் ஆகவும்

ஆனைமலை மாசாணியம்மன்கோயில் உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் விஜயலட்சுமி - கோவை துணை ஆணையர் ஆகவும்

தென்காசி உதவி ஆணையர் கோமதி - சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயில் துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் ஆகவும்

மயிலாடுதுறை உதவி ஆணையர் முத்துராமன் - கடலூர் துணை ஆணையர் ஆகவும்

தேனி உதவி ஆணையர் கலைவாணன் - மதுரை அழகர் கோயில் கள்ளழகர் கோயில் துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் ஆகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

கூடுதல் பொறுப்புகள்


மேனகாவிடம் பண்ணாரி மாரியம்மன் கோயில் துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் பதவியும்

செல்வராஜிடம் அறநிலையத்துறை ஆணையர் அலுவலக உதவி ஆணையர் -7 பதவியும்

ஹர்சினியிடம் மருதமலை சுப்பிரமணியசுவாமி துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் பதவியும்

துணை கமிஷனர் ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள ராணி, நாகப்பட்டினம் உதவி ஆணையர் பதவியும்

ராமுவிடம் மயிலாடுதுறை துணை ஆணையர் பதவியும்

ஜெயதேவியிடம் கரூர் உதவி ஆணையர் பதவியும்

யக்ஞநாராயணனிடம் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உதவி ஆணையர் மற்றும் நேர்முக உதவியாளர் பதவியும்

வளர்மதியிடம் மதுரை உதவி ஆணையர் பதவியும்

துணை ஆணையர் ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள செல்வியிடம் தூத்துக்குடி உதவி ஆணையர் பதவியும்

தங்கத்திடம் நாகர்கோவில் உதவி ஆணையர் பதவியும்

மாங்காடு காமாட்சியம்மன் கோயில் துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ள சித்ராதேவியிடம் தற்போது அவர் பணிபுரியும் திருவள்ளூர் உதவி ஆணையர் பதவியும்

சிவகங்கை துணை ஆணையர் ஆக பதவி உயர்வு பெற்றுள்ள சங்கரிடம், சிவகங்கை உதவி ஆணையர் பதவியும்

ராஜாவிடம் சேலம் உதவி ஆணையர் பதவியும்

காஞ்சிபுரம் துணை ஆணையர் ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள ஜெயாவிடம், அவர் ஏற்கனவே பணிபுரியும் சோளிங்கர் நரசிம்மசுவாமி கோயில் உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் பதவியும்

தகலாசமூர்த்தியிடம் தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோயில் உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் பதவியும்

கோவை துணை கமிஷனர் ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள விஜயலட்சுமியிடம்,அவர் ஏற்கனவே கூடுதல் பொறுப்பாக கவனித்து வரும் ஈச்சனாரி விநாயகர் கோயில் உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் பதவியும்

கவிதாவிடம் நெல்லை உதவி ஆணையர் பதவியும்

துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ள கோமதியிடம், அவர் தற்போது கூடுதலாக கவனித்து வரும் பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயில் உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் பதவியும்

ரவிச்சந்திரனிடம் திருவானைக்காவல் ஜெம்புகேசுவரர் மற்றும் அகிலாண்டேசுவரி அம்மன் கோயில் செயல் அலுவலர் மற்றும் துணை ஆணையர் பதவியும்

சுரேஷிடம் திண்டுக்கல் உதவி ஆணையர் பதவியும்

அன்னக்கொடியிடம் தேனி உதவி ஆணையர் பதவியும் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

மாற்றியமைப்பு


தற்போது கூடுதல் பொறுப்பில் கவனிக்கப்படும் கீழ்க்கண்ட பணியிடங்கள் பின் வருமாறு மாற்றியமைக்கப்படுகிறது.

உறையூர் வெக்காளியம்மன் கோயில் உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் பதவி, திருச்சி துணை ஆணையர் சரவணனிடம்,

திருப்பூர் உதவி ஆணையர் பதவி, திருப்பூர் துணை ஆணையர் செந்தில்குமாரிடமும்

அய்யம்பாளையம் வாழைத்தோட்டத்து அய்யன் கோயில் உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் பதவியானது நாமக்கல் உதவி ஆணையர் இணையராஜாவிடமும் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

துணை ஆணையர் மாற்றம்


தூத்துக்குடி துணை ஆணையர் வெங்கடேஷ் பழநி துணை ஆணையர் ஆக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us