ADDED : மே 26, 2025 02:46 AM

மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சொத்து வரியை உயர்த்தி, கிராமப்புற மக்களின் மீது பொருளாதார சுமையை ஏற்றியுள்ளன.
நடப்பு மற்றும் அடுத்த நிதி ஆண்டில், ஏற்கனவே உயர்த்தப்பட்ட சொத்து வரியிலிருந்து, 6 சதவீதம் வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், வரி செலுத்தும் லட்சக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
ஏற்கனவே, தமிழக அரசு இரண்டு, மூன்று முறைக்கு மேல் பேரூராட்சி, மாநகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் உள்ள வீடுகள், கடைகளுக்கு சொத்து வரியை உயர்த்தியதால், ஏழை, எளிய நடுத்தர மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தற்போது, 6 சதவீத வரி உயர்வை நடைமுறைப்படுத்துவதை மக்கள் எதிர்க்கின்றனர். எனவே, தமிழக அரசு இனிமேல் மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றக்கூடாது. தற்போது உயர்த்தப்பட்டிருக்கும் சொத்து வரியை திரும்ப பெற வேண்டும். இல்லலையேல், அதற்கான பலனை ௨௦௨௬ல் தி.மு.க., பெறும்.
- வாசன்,
தலைவர், த.மா.கா.,