தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தொழில் பழகுனருக்கும் இ.எஸ்.ஐ., பி.எப்.,: வெளிநாட்டு வர்த்தகர்கள் எதிர்பார்ப்பு

தொழில் பழகுனருக்கும் இ.எஸ்.ஐ., பி.எப்.,: வெளிநாட்டு வர்த்தகர்கள் எதிர்பார்ப்பு

தொழில் பழகுனருக்கும் இ.எஸ்.ஐ., பி.எப்.,: வெளிநாட்டு வர்த்தகர்கள் எதிர்பார்ப்பு


UPDATED : அக் 12, 2026 07:11 PM

ADDED : அக் 12, 2026 07:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 07:11 PM ADDED : அக் 12, 2026 07:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: 'தொழில் பழகுனருக்கு இ.எஸ்.ஐ.,- பி.எப். பாதுகாப்பை வெளிநாட்டு வர்த்தகர்கள் எதிர்பார்ப்பதால், மத்திய அரசு தகுந்த தீர்வு வழங்க வேண்டும்' என ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மத்திய அரசின் 'சமர்த்' திட்டத்தில், வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை அழைத்து வந்து பயிற்சி அளித்து பணியில் சேர்த்தால், தொழிலாளர் ஒருவருக்கு 14 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.

ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளில் முன் அனுபவம் இல்லாத தொழிலாளர்கள் தையல் பழகி, ஆடை வடிவமைப்பு பணிகளை கற்க ஆறு மாதங்கள் ஆகிறது. அதுவரை தொழில் பழகுனர் என்ற அடிப்படையில் பணியாற்றுகின்றனர். பணியில் நிரந்தரமாக சேர்ந்த பிறகே இ.எஸ்.ஐ., - பி.எப். திட்டங்களில் இணைக்கப்படுகின்றனர்.

ஆனால், வெளிநாட்டு வர்த்தகர்கள் தொழிலாளர் நலன் சார்ந்த பல்வேறு நிபந்தனைகளை விதிக்கின்றனர். தொழில் பழகுனராக பணியாற்ற தொடங்கினாலும் ஏற்றுமதிக்கான பொருட்கள் உற்பத்தியில் ஈடுபடுவதால், தொடக்கத்திலிருந்தே இ.எஸ்.ஐ., - பி.எப். திட்டத்தில் இணைக்க வேண்டும் என, வர்த்தகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகள் தொழிலாளர் நலனில் அதிக எதிர்பார்ப்பு கொண்டுள்ளன. தொழில் பழகுனருக்கும் இ.எஸ்.ஐ., - பி.எப். சட்ட ரீதியான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். ஆனால் பணியாளர் பணியில் சேர்ந்த பின்னரே இத்தகைய பாதுகாப்பை வழங்க முடியும்.

திருப்பூர் வந்திருந்த மத்திய அரசின் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் செயலர் நிரஞ்சன் குமார் சுதான்ஷுவிடம் இது தொடர்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது. பல்வேறு கிளஸ்டர்களில் இருந்து இத்தகைய கோரிக்கை வந்துள்ளதால் அரசு கவனத்துக்கு கொண்டு சென்று தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us