கருப்புக்கொடி ஏந்தி முதல்வருக்கு அண்ணாமலை எதிர்ப்பு
கருப்புக்கொடி ஏந்தி முதல்வருக்கு அண்ணாமலை எதிர்ப்பு
ADDED : டிச 30, 2025 07:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: திருப்பூர் அருகே, இடுவாய், சின்னக்காளிபாளையம் கிராமத்தில், மாநகராட்சி குப்பையை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, போராடியவர்கள் மீது வழக்குப்பதியப்பட்டு, சிலர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதை கண்டித்து, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தலைமையில், திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, பல்லடம் வரும் முதல்வரை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவிப்போம் என அண்ணாமலை அறிவித்திருந்தார்.
இதன்படி, நேற்று பல்லடம் வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு, கோவையில் உள்ள தன் வீட்டின் முன் நின்று அண்ணாமலை கருப்புக்கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தார்.

