ADDED : பிப் 16, 2026 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி: தென்காசி மாவட்டம், கடையநல்லுாரில், சில தினங்களுக்கு முன், அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் பங்கேற்ற, அக்கட்சியின் கடையநல்லுார் தொகுதி எம்.எல்.ஏ., கிருஷ்ண முரளி, மகளிர் உரிமைத்தொகை, 5,000 ரூபாய் பெற்ற பெண்களை சிறுமைப்படுத்தும் வகையில் அவதுாறாக பேசியுள்ளார். இந்த வீடியோ பரவி, சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதை கண்டித்து, தென் காசி தெற்கு மாவட்ட தி.மு.க.,வினர், எம்.எல்.ஏ., கிருஷ்ண முரளியின் சொந்த ஊரான செங்கோட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

