ADDED : நவ 19, 2026 07:18 PM

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில், குடிமனைப் பட்டா வழங்கக் கோரி, மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் இன்று (நவ.,19) நடந்த போராட்டத்தில், புதுக்கோட்டை மாவட்டம் முழுதும், அரசு புறம்போக்கு நிலங்களில், பல ஆண்டுகளாக குடியிருந்து வருபவர்களுக்கு, வகை மாற்றம் செய்து குடிமனைப் பட்டா வழங்க வேண்டும்.
காலம் காலமாக இனாம் உள்ளிட்ட நிலங்களில் சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு உழவடைப் பட்டா வழங்க வேண்டும்.
தமிழக அரசு, வகைமாற்றம் செய்து பட்டா வழங்கும் திட்டத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தையும் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
அதில் பங்கேற்ற, 1,000க்கும் மேற்பட்டவர்கள், புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லுாரி அருகில் இருந்து, மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை பேரணியாக சென்று, மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைசாமியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
